Connect with us

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையானுக்கு உதவிய சிறை அதிகாரி கைதாவாரா?

Published

on

Loading

ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையானுக்கு உதவிய சிறை அதிகாரி கைதாவாரா?

 சிறையில் உள்ள பிள்ளையானின் அரசியல் ஆலோசகரான ஸ்டாலின் ஜானம் என்பவரின் மனைவியின் சகோதரரும் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனுக்கும் பிள்ளையானின் ஈஸ்டர் தாக்குதலுக்கும் பல தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிறையில் உள்ள   பிள்ளையான் யார் யாரை காட்டிக்கொடுக்கப்போகின்றார் என்பது தெற்கிலும் கிழக்கிலும் பேசப்படுகின்ற பரபரப்பான விடயமாகவுள்ளது.

Advertisement

கடந்த 2015ஒக்டோபர் 11 ம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு புளொட் ஞானத்தின் மைத்துனரான நல்லையா பிரபாகரன் பிதம ஜெயிலராக கடமையேற்கிறார்.

கடமையேற்ற காலத்திலிருந்து பிள்ளையானுக்கான தொலைபேசி உதவிகளை மற்றொரு சிறைச்சாலை அதிகாரி நவனீதன் மூலமாக செய்துகொடுக்கிறார்.

Advertisement

இடமாற்றத்தின் பின்னராக 2022 ஓகஸ்ட் மீண்டும் சிறைச்சாலை அத்தியட்சகராக மட்டக்களப்பில் கடமையேற்கிறார்.

இவர் மீண்டும் கடமையேற்றபின்னர், பிள்ளயானுக்கும் ஈஸ்டர் தாக்குதல் திட்டம் தொடர்பாக காணப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவனங்களை நவனீதனின் உதவியுடன் அழித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஞானம் 2018-2021 வரை கடமையாற்றிய எஸ்.எல்.விஜயசேகர எனப்படும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக இரகசியத் தொடர்புகளை இவர் ஏற்படுத்திக்கொடுத்ததாக கூறப்படுகின்றது.

Advertisement

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தான் சிறையிலிருக்கும்போது எவ்வாறு திட்டமிடமுடியும் என பிள்ளையான் தெரிவிப்பதன் பின்னணி இதுவேயாகும்.

ஏனெனில் தான் சிறைக்கைதி என்பதால் திட்டமிடமுடியாது என்று வாதிட்டு இதிலிருந்து தப்புவதற்கே முயற்சிக்கிறார்

ஆனால், பிள்ளையான் சிறையில் இருக்கும்போது மட்டக்களப்பு சிறைச்சாலை நிருவாகம் இந்த தாக்குதலுக்கு பல உதவிகளைச் செய்துள்ளது.

Advertisement

இந்நிலையில் தற்போதைய அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், முன்னாள் அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர , சிறைச்சாலை உத்தியோகத்தர் குழந்தைவேல் நவநீதன் ஆகியோரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தால் முழு உண்மைகளும் வெளிப்படுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர் 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன