Connect with us

உலகம்

மெக்ஸிகோவில் ட்ரக் வண்டியிலிருந்து சடலங்கள் மீட்பு!

Published

on

Loading

மெக்ஸிகோவில் ட்ரக் வண்டியிலிருந்து சடலங்கள் மீட்பு!

வன்முறையால் பாதிக்கப்பட்ட தெற்கு மெக்சிகன் நகரத்தில் ட்ரக் வண்டியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் இரு பெண்கள், இரு சிறுவர்கள் உட்பட 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில்பான்சிங்கோ (Chilpancingo) நகரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Advertisement

கடந்த மாதம் பதவியேற்ற ஒரு வாரத்திற்கு பின்னர் சில்பான்சிங்கோ நகர மேயர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த ட்ரக் வண்டியில் சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்றும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

சில்பான்சிங்கோ நகரம் தெற்கு மாநிலமான குரேரோவின் தலைநகரம் ஆகும், இது பல ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு இடையேயான மோதல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் மெக்ஸிகோவில் 450,000 க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன