இலங்கை
சென்னை அணியை வெளியேற்றி மும்பை அணி அபார வெற்றி!

சென்னை அணியை வெளியேற்றி மும்பை அணி அபார வெற்றி!
5 முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 8ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்தித்து வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.
இந்த போட்டிக்கான நாணயச்ழற்ச்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்கஸ் முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்ககியது.
இந்த ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ஓட்டங்களை சி.எஸ்.கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ஓட்டங்கள், ஷிவம் துபே 50 ஓட்டங்கள், ஆயுஷ் மாத்ரே 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதைதொடர்ந்து, 177 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.
பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.