இலங்கை
சனி பெயர்ச்சியால் தலைவிதியையே மாறப்போகும் ராசிகள்

சனி பெயர்ச்சியால் தலைவிதியையே மாறப்போகும் ராசிகள்
சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாகும்.ஏப்ரல் 28 ஆம் திகதி காலை 7:52 மணிக்கு, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இது ஒரு பொற்காலமாய் திகழும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
சனி நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.
சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல பலன்களைக் கொண்டுவரும். திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இதுவரை நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
சனி நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். மன அமைதி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.