பொழுதுபோக்கு
சூர்யா – ஜோதிகா அஸ்ஸாம் காமாக்யா கோவிலில் தரிசனம்: ‘ரெட்ரோ’ வெற்றிக்கு பிரார்த்தனை

சூர்யா – ஜோதிகா அஸ்ஸாம் காமாக்யா கோவிலில் தரிசனம்: ‘ரெட்ரோ’ வெற்றிக்கு பிரார்த்தனை
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் நேற்று (ஏப்ரல் 20) அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தங்களது நல்வாழ்வுக்காகவும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.காமாக்யா கோவிலில் சூர்யா மற்றும் ஜோதிகா தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பதிவில் தான் விரைவில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் பழமையான மற்றும் சக்தி வாய்ந்த கோவில்களில் ஒன்றாக கருதப்படும் காமாக்யா கோவிலுக்கு பிரபலங்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் இந்த திடீர் வருகை திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. ‘ரெட்ரோ’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறுமா என்பதையும், ஜோதிகாவின் புதிய படம் குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது