இலங்கை
பெண் வேடமிட்டு யாழில் சங்கிலி அறுத்த கில்லாடிகள் – பெண்கள் உட்பட நால்வர் கைது

பெண் வேடமிட்டு யாழில் சங்கிலி அறுத்த கில்லாடிகள் – பெண்கள் உட்பட நால்வர் கைது
பெண் வேடமணிந்த ஆண் உட்பட இரு ஆண்களும், இரு பெண்களும் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், இணுவிலில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்றுத் தேர்த்திருவிழா நடைபெற்றது. திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்களின் சுமார் 4 பவுண் பெறுமதியுடைய சங்கிலிகள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அறுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாகக் கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், ஆலயச் சூழலில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நால்வரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் வேடமணிந்த ஆண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.