இலங்கை
இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து கோர விபத்து ; 22 வீரர்கள் காயம்

இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து கோர விபத்து ; 22 வீரர்கள் காயம்
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பேருந்தின் ஓட்டுநரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் ஓட்டுநர் மற்றும் ஒரு ராணுவ வீரர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கள் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.