இந்தியா
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டை ஃபெஞ்சல் புயல் நெருங்கும் நிலையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இப்பணிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
புயல் இன்று மாலை கரையைக் கடக்கூடிய நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையின் தீவிரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் மேற்கொண்ட ஆய்வின் போது, அவருடன் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்காணி, சென்னை மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.