சினிமா
இந்த ஊசி போட்டுத்தான் நடிகை குஷ்பு உடல் எடையை குறைத்தாரா?

இந்த ஊசி போட்டுத்தான் நடிகை குஷ்பு உடல் எடையை குறைத்தாரா?
தமிழ் சினிமாவில் நிறைய டிரெண்டுகளை உருவாக்கியவர் நடிகை குஷ்பு. குஷ்பு கொண்டை, ஜாக்கெட், இட்லி என நிறைய விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். நடிகை குஷ்பு தனது உடல் எடையை அப்படியே குறைத்து ஆளே மாறியிருந்தார், அவரது மாற்றத்தை கண்டு ரசிகர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள்.தற்போது என்னவென்றால் ஒரு ரசிகர், நடிகை குஷ்பு மவுன்ஜாரோ ஊசியால் தான் தனது உடல் எடையை குறைத்தார் என்றார்.இதற்கு குஷ்பு, உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு எப்போதும் தலைவலியாக இருக்கிறீர்கள்.நீங்கள் உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்கள். ஏன் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் மனம் எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் பெற்றோருக்காக வருந்துகிறேன் என பதில் அளித்துள்ளார்.