இலங்கை
கையும் களவுமாக பிடிபட்ட காதி நீதிபதி ; விவாகரத்து வழக்கிற்காக இலஞ்சம்

கையும் களவுமாக பிடிபட்ட காதி நீதிபதி ; விவாகரத்து வழக்கிற்காக இலஞ்சம்
இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காதி நீதிபதி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
கண்டி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழக்கொன்றின் தீர்ப்பை விரைவாக வழங்குவதற்காக 200,000 ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்ட கெலி ஓயா பிரதேச காதி நீதிபதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது அலுவலகத்தில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.