இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்? ஜனாதிபதி அநுரவிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்? ஜனாதிபதி அநுரவிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், அவ்வாறு எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்தார்.
திஸ்ஸமஹாராமவில் நடந்த மக்கள் சந்திப்பில் போதே அவர் இவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களை ஏமாற்றி, சாக்குப்போக்குகளை கூறுவதாகவும், தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மட்டுமே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
சஜித், திசைகாட்டி அரசாங்கத்தை “பொய்யும் பாசாங்குத்தனமும்” கொண்டதாக விமர்சித்து, மின் கட்டணத்தில் 33% குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதாகக் கூறினார்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலையீட்டால் 20% குறைப்பு மட்டுமே நடந்ததாகவும், எஞ்சிய 13% குறைப்பை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதாக ஜனாதிபதி கூறுவது சட்டவிரோதமெனவும், உள்ளூராட்சி சட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாகப் பேசுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
2028 முதல் வெளிநாட்டுக் கடன்களை அடைக்க 5%க்கு மேல் பொருளாதார வளர்ச்சி தேவை எனவும், இதற்கு தொழிற்சாலைகள், சுற்றுலா, ஏற்றுமதி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டுமெனவும், ஆனால் அரசாங்கத்திடம் திட்டமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளை மக்கள் தீர்மானிக்க வேண்டுமெனக் கூறிய சஜித், புதிய பொய்களுடன் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.