சினிமா
தமிழ்நாட்டில் 12 நாட்களில் குட் பேட் அக்லி செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

தமிழ்நாட்டில் 12 நாட்களில் குட் பேட் அக்லி செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வந்தது.ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் அமோக வரவேற்பை பெற்றது.ரசிகர்கள் எப்படி அஜித்தை திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என நினைத்தார்களோ, அதே போல் படத்தை இயக்கியிருந்தார் ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரன்.வசூலில் பட்டையை கிளப்பி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது லாபத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் 12 நாட்களில் இப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 150.5 கோடி வசூல் செய்துள்ளது.