விளையாட்டு
கடலூர் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை தொடக்கம்: மாணவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

கடலூர் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை தொடக்கம்: மாணவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
செய்தி: பாபு ராஜேந்திரன்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கேற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில் 28 இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் ஏப்ரல் 18 முதல் WWW.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் விண்ணப்பத்தினை 05.05.2025 அன்று மாலை 5.00 மணி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.தேர்விற்கு இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.விண்ணப்பம் அளித்த கடலுார் மாவட்டத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 07.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் மாணவர்களுக்கும், 08.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் மாணவியர்களுக்கும் கடலுார் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேர்வுப் போட்டியில், விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவனங்களுடன் கலந்துகொள்ளவேண்டும். மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்விற்கு தகுதிபெறுவார்கள். அதன் விபரம் SDATஇன் அதிகார பூர்வமான இணைய தளத்தில் வெளியிடப்படும். மேலும் நேரடியாக மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள், வால்வீச்சு, ஜுடோ, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கிலும், ஸ்குவாஷ் போட்டிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், பளுதூக்குதல், உஷூ ஆகிய விளையாட்டுகளுக்கு தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்தியா விளையாட்டு அரங்கிலும், நீச்சல் விளையாட்டுக்கு சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்திலும், Handball விளையாட்டிற்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கிலும், மல்யுத்தம், டேக்வோண்டோ ஆகிய விளையாட்டிற்கு கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கிலும், மல்லர் கம்ப விளையாட்டிற்கு விழுப்புரம் விளையாட்டு அரங்கிலும், 12.5.2025 அன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி நடைபெறும். எனவே கடலுார் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுடைய மாணவ மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர உரிய நேரத்திற்குள் விண்ணப்பித்து, தேர்வுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார தெரிவித்துள்ளார்.