சினிமா
ரம்பா சினிமாவை விட்டுவிலக காரணம் இதுதானா…! வெளியான உண்மை இதோ..!

ரம்பா சினிமாவை விட்டுவிலக காரணம் இதுதானா…! வெளியான உண்மை இதோ..!
90களில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகம் முழுவதும் தனது நடனம், அழகு மற்றும் கவர்ச்சி என்பன மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் தான் நடிகை ரம்பா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். எனினும் திருமணத்தின் பின் சுமார் 15 ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து விலகியிருந்தார்.தற்போது, விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ‘ஜோடி – Are You Ready?’ எனும் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு, மீண்டும் ஒரு மின்னலாக மக்கள் மத்தியில் மின்னி வருகின்றார். இதன் பின்னணியில், இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும், சினிமாவிலிருந்து விலகி இருந்த காரணத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.அதன் போது நடிகை ரம்பா கூறியதாவது, “திருமணத்துக்குப் பிறகு என் வாழ்க்கை முழுக்கவே மாறிவிட்டது. எனக்கு குழந்தைகள் பிறந்த போது, ஒரு குறிப்பிட்ட வயதுவரை அவர்கள் அருகில் பெற்றோர்களில் ஒருவராவது இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நினைத்தேன். அதனால் தான், என் குடும்பத்திற்காக, குறிப்பாக என் பிள்ளைகளுக்காக நான் சினிமாவிலிருந்து விலகினேன்.” என்று கூறி, அனைவரையும் உணர்ச்சிப் பெருக்கத்தில் ஆழ்த்தினார்.