இலங்கை
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் உயிரிழப்பு!
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று இரவு வெல்லப்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் படுகாயமடைந்தநிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் வைத்தே டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தார். அவர் உயிரிழந்தார் என்று நேற்று இரவு செய்திகள் வெளியானபோதும் பொலிஸார் அதை மறுத்திருநதனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் இன்று காலை அறிவித்துள்ளனர்.