இலங்கை
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காய்யச்சல் காரணமாக 5 மாதப் பெண் குழந்தை ஒன்று உயிரழிந்துள்ளது. உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த ரின் பவிசா என்ற குழுந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தைக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் குணமாகாத நிலையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. சிகிச்சை பயனின்றி நேற்றுக் குழந்தை உயிரிழந்தது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குழுந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.