சினிமா
இனியாவின் வாழ்க்கையை வைத்து நாடகமாடும் சுதாகர்..!வேதனையில் குமுறும் பாக்கியா..!

இனியாவின் வாழ்க்கையை வைத்து நாடகமாடும் சுதாகர்..!வேதனையில் குமுறும் பாக்கியா..!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் பாக்கியாவப் பாத்து சொந்தப் பொண்ணுக்கு ரெஸ்டாரெண்ட கிப்டா கொடுத்திட்டு பணம் கேக்கிற கேவலமானவங்களா நீங்க என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா யாரப் பாத்து கேவலமானவள் என்று சொல்லுறீங்க என்கிறார். மேலும் நல்லா ஜோசிச்சுப் பாருங்கா யாரு கேவலமானவர் என்று உங்களுக்கே புரியும் என்று சுதாகரைப் பாத்துச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து ஒரு ரெஸ்டாரெண்டுக்காக மகனின்ர வாழ்க்கையையே அடகு வச்சிருக்கிற நீங்க கேவலத்தப் பற்றிப் பேசுறீங்களா என்று கோபமாகச் சொல்லுறார்.இதனைக் கேட்ட சுதாகர் நீங்க எல்லை மீறி கதைக்கிறீங்க என்று சொல்லுறார். அதுக்கு பாக்கியா இப்படித் தான் எல்லாரையும் ஏமாத்தி பிஸ்னஸ் பண்ணுறீங்களா என்று கேக்கிறார். மேலும் அடுத்தவங்களிட்ட வாங்கி வாழுறது எல்லாம் என்ன வாழ்க்கை என்று சொல்லுறார். இதைக் கேட்ட சுதாகர், என்ன விட்டா ஓவராப் பேசிக் கொண்டே போறீங்க என்று சொல்லுறார்.அதைத் தொடர்ந்து உங்க பொண்ணு என்னோட வீட்டில வாழுறாள் அத நினைவில வச்சிருங்கோ என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா என்னோட பொண்ண என்ன பண்ணுவீங்க என்று கேக்கிறார். மேலும் இனியாவோட வாழ்க்கையில ஏதாவது நடந்தா உங்கள சும்மாவே விட மாட்டேன் என்று சொல்லுறார். அதுக்கு சுதாகர் சம்மந்தி உங்களுக்கு என்னைப் பற்றி சரியாத் தெரியல என்று சொல்லுறார்.இதனை அடுத்து எல்லாரையும் இண்டையோட ரெஸ்டாரெண்ட விட்டுப் போகச்சொல்லுறார் சுதாகர். அதைக் கேட்ட பாக்கியா அழுது கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து செல்வி பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். பின் வீட்டுக்கு வந்த பாக்கியா யாருகிட்டையும் எதுவுமே கதைக்காம அமைதியா இருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.