Connect with us

இலங்கை

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம் ; புதிய தகவலை வெளியிட்ட அலி சப்ரி

Published

on

Loading

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம் ; புதிய தகவலை வெளியிட்ட அலி சப்ரி

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு, சட்டமாக நிறைவேற்றுவதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது என முன்னாள் நீதியமைச்சரும், வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப் புத்தக  பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது

முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் குறித்த கருத்தாடல்களை அடுத்து புதிய சட்ட வரைபைத் தயாரித்துப் பூரணப்படுத்தியிருந்ததுடன் அதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு, சட்டமாக நிறைவேற்றுவதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தற்போது அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு, சட்டமாக நிறைவேற்றுவதை மாத்திரமே செய்யவேண்டியிருக்கிறது

Advertisement

இருப்பினும் அதற்கு இலங்கையிலுள்ள ஆணாதிக்கப்போக்குடைய முஸ்லிம் சிவில் சமூகமும், இஸ்லாமிய மத அமைப்புக்களும் ஆதரவளிக்கும் வரை காத்திருந்தால், எனது கடந்தகால அனுபவத்துக்கு அமைய, ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு சட்டம் வராமலேயே போய்விடும்.

நாம் தயாரித்த வரைபு முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த பெண் உரிமைகள் செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் பூர்த்திசெய்யாத வகையிலோ அல்லது மிகநேர்த்தியானதாகவோ இல்லாமல் இருக்கக்கூடும்.

இருப்பினும் அச்சட்ட வரைபில் பெண் காதி, காதிக்கான குறைந்தபட்ச தகைமை, திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையாக 18 வயது, பலதாரமணம் தொடர்பான மட்டுப்பாடுகள், நீதிவான் நீதிமன்றத்தின்வசம் நிர்வாக அதிகாரம் உள்ளிட்ட பல முற்போக்கான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன எனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன