Connect with us

இந்தியா

திருமணம், தேனிலவு, தகனம்: கெட்ட கனவாக மாறும் என ஒருபோதும் நினைத்ததில்லை – கடற்படை அதிகாரியின் மனைவி வேதனை!

Published

on

Pahalgam terror attack

Loading

திருமணம், தேனிலவு, தகனம்: கெட்ட கனவாக மாறும் என ஒருபோதும் நினைத்ததில்லை – கடற்படை அதிகாரியின் மனைவி வேதனை!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்.22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஹரியானாவைச் சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவினய் நர்வாலுக்கு டெல்லியில் கடற்படை சார்பில் நேற்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கணவரின் சவப்பெட்டியை கட்டிப்பிடித்து அவரது மனைவி ஷிமான்ஷி அழுதார். ஜெய்ஹிந்த் என வீர முழக்கம் எழுப்பினார். இந்தப் பயணம் ஒரு கெட்ட கனவாக மாறும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று நா தழுக்க ஷிமான்ஷி பேசினார். தனது கணவருக்கு மனைவி கனத்த மனதுடன் அழுதபடி பிரியாவிடை அளித்த மனதை உருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.#WATCH | Delhi | Indian Navy Lieutenant Vinay Narwal’s wife bids an emotional farewell to her husband, who was killed in the Pahalgam terror attackThe couple got married on April 16. pic.twitter.com/KJpLEeyxfJஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் நர்வால் (26 வயது) பி.டெக் பட்டப்படிப்பை முடித்த பிறகு நர்வால் இந்தியக் கடற்படையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்துள்ளார். வினய் நர்வால் அவரின் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவரின் தங்கை சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். வினய் நர்வாலின் தந்தை ஜிஎஸ்டி துறையில் கண்காணிப்பாளராக உள்ளார் மற்றும் அவரின் தாத்தா ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆவார்.இந்நிலையில் வினய் நர்வாலுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி பெற்றோர், குர்கிராமைச் சேர்ந்த ஹிமான்ஷி என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். கடற்படை அதிகாரிக்கும் இவருக்கும் திருமணம் கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடந்தது. திருமண வரவேற்பு கடந்த 19ம் தேதி உற்றார் உறவினர்கள் சூழ இனிதே நடந்தது. கடற்படை அதிகாரி வினய் நர்வாலுக்கு திருமணத்திற்கு முன்பே காஷ்மீர் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தனர். விசா கிடைக்க தாமதமானதால் காஷ்மீருக்கு சென்றனர். பஹல்காமில் உள்ள ரோட்டோர கடையில் பேல்பூரி சாப்பிட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த பயங்கரவாதி வினய் நர்வலை சுட்டுக் கொன்றனர்.நர்வாலின் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் கூற்றுப்படி, மே 1-ம் தேதி தனது 27 வது பிறந்தநாளைக் கொண்டாட நர்வால் ஆவலுடன் இருந்தார், அதற்காக அவர்கள் ஒரு பிரமாண்டமான நிகழ்வைத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், புதன்கிழமை மாலை, கர்னல் நகரில் உள்ள நர்வாலின் வீட்டிற்கு வெளியே, அலங்கார பலகைகள், சுவர்களில் மருதாணி கறைகள் மற்றும் நுழைவாயிலில் மா இலைகளால் ஆன மாலை ஆகியவை முன்பு இருந்ததை சாட்சியமளித்தன. யதார்த்தத்தை எதிரொலிக்கும் வெள்ளை கூடாரங்களும் விரக்தியின் அலறல்களும் இருந்தன.”என் பேரன் என்னை இப்படி விட்டுச் செல்வான் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை,” என்று பி.எஸ்.எஃப். படையில் இருந்து ஓய்வு பெற்ற நர்வாலின் தாத்தா ஹவா சிங் கூறினார். அவர் தனது கல்லூரி நாட்களிலிருந்தே எப்போதும் பாதுகாப்புப் படைகளில் சேர விரும்பினார். அவரால் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை, எனவே அவர் சேவைகள் தேர்வு வாரியத் தேர்வை எழுதி 3 ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் சேர்ந்தார்.”ஹிமான்ஷியின் தந்தை சுனில் குமார் கூறியவை: “சில நாட்களுக்கு முன்பு, நான் அவளுடைய கைகளை மருதாணி மற்றும் வளையல்கள் கொண்டு அலங்கரித்தேன். இன்று, அவளை ஆறுதல்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லை.” வினயின் சகோதரி சிருஷ்டி, “என் சகோதரனின் தவறு என்ன?” என்று கேட்டார்.பின்னர், நர்வாலின் உடல் வந்தவுடன், கூடியிருந்த ஏராளமான மக்கள் “பாரத் மாதா கி ஜெய்”; “வினய் நர்வால் அமர் ரஹே”; “பாகிஸ்தான் முர்தாபாத்” என கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். இறுதிச் சடங்கு நிகழ்வில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, சபாநாயகர் ஹர்விந்தர் கல்யாண், அமைச்சர்கள் ஷியாம் சிங் ராணா மற்றும் ஹர்பால் சிங் சீமா மற்றும் இந்திய கடற்படை பிரதிநிதிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். “மாநில அரசு உங்களுடன் நிற்கிறது. விரைவான நீதியை நாங்கள் உறுதி செய்வோம்” என்று சைனி கூறினார்.திருமண விழா 10 நாட்கள் நீடித்தன. அவர் மிகவும் அழகான பையன் என்று நர்வாலின் பக்கத்து வீட்டுக்காரர் சீமா சர்மா கூறினார். “இதெல்லாம் திடீரென்று நடந்தது, யாரோ ஒருவரின் தீய கண் அவர்களைத் தாக்கியதுபோல. அவரது குடும்பம் என்ன நடக்கிறது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.”கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், “பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் துயர இழப்பால் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, #CNS மற்றும் இந்திய கடற்படையின் அனைத்து பணியாளர்களும் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளனர். கற்பனை செய்ய முடியாத துயரத்தின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன