சினிமா
சிம்ரன் கூட நாங்க எல்லாம் நடிக்கக் கூடாதா…?ஓப்பனாகப் பேசிய சசிகுமார்..!

சிம்ரன் கூட நாங்க எல்லாம் நடிக்கக் கூடாதா…?ஓப்பனாகப் பேசிய சசிகுமார்..!
தமிழ் சினிமாவில் எப்பொழுதும் தனக்கென ஒரு அடையாளத்துடன் பயணிக்கின்ற நடிகர் சசிகுமார். குடும்பக் கதைகள், உணர்வு பூர்வமான பந்தங்கள் மற்றும் எளிய கதாப்பாத்திரங்கள் என்று சொல்லப்படும் போது அவருடைய படங்கள் அந்தத் தளத்தில் தனி இடம் பிடித்திருக்கும். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘டூரிஸ்ட் பாமிலி’, மே 1ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றது.இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இந்தக் கூட்டணியைப் பற்றி சமீபத்திய ஒரு நேர்காணலில் சசிகுமார் நேரடியாகப் பேசியுள்ளார்.அந்த பேட்டியில் சசிகுமாரிடம், “சிம்ரனும் நீங்களுமா ஒரே படத்தில் நடிக்கப் போகிறீர்களா?” எனப் பலரும் கேள்வி எழுப்பினார்கள் என்று கூறியிருந்தார். மேலும் அந்தக் கேள்விகளுக்கு நான் சிரித்தபடியே “ஏன் நானும் சிம்ரனும் நடிக்கக் கூடாதா? எனக் கேட்டதாகவும் கூறியிருந்தார்.சிம்ரனுடன் சசிகுமார் இணைந்த கூட்டணி ரசிகர்களுக்கு சந்தோசமாக இருந்தது எனவும் சிலர் கூறியிருந்ததாக சசிகுமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். அத்துடன் இப்படம் தியட்டரில் வெளியாகிய பின் அனைத்து ரசிகர்களின் மனங்களையும் கவரும் வகையில் இருக்கும் எனவும் கூறியிருந்தார்.