இலங்கை
தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை; பொலிஸாருக்கு பறந்த உத்தரவு

தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை; பொலிஸாருக்கு பறந்த உத்தரவு
தேவையின்றி பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே.
எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.