சினிமா
டப்பா ரோலைவிட Aunty ரோலுக்கு நடிக்கிறது Better;சிம்ரனின் கருத்துக்குப் பதிலடி கொடுத்த லைலா

டப்பா ரோலைவிட Aunty ரோலுக்கு நடிக்கிறது Better;சிம்ரனின் கருத்துக்குப் பதிலடி கொடுத்த லைலா
90-களில் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த கதாநாயகிகளில் ஒருவரான சிம்ரன், தற்போது தனது திரைப்பயணத்தில் 30 ஆண்டுகள் கடந்ததை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார். இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் ஒர் சிறப்புப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் அவர் பேசிய சில வார்த்தைகள் தற்போது பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.அதன்போது சிம்ரன், “இந்த 30 வருடங்கள் எனக்குப் பயணமா இல்லாது போராட்டமாகவே இருந்தது என்றார். மேலும் “நான் என்னுடன் நடித்த ஒரு நடிகைக்கு நீங்க நடிச்சது ரொம்பவே நல்லா இருந்தது என்று MSG அனுப்பியிருந்தேன். அதற்கு அவங்க, ‘Aunty ரோலுக்கு இது எவ்வளவோ better’ன்னு முட்டாள் மாதிரி பதிலளிச்சாங்க. அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது,” எனத் தெரிவித்திருந்தார்.தொடர்ந்து சிம்ரன், “ஒரு நடிகையா நமக்குத் தான் என்ன பண்ணுறோம் என்கிற தீர்மானம் முக்கியம். audience-க்கு respect கிடைக்கணும். அத்துடன் டப்பா ரோலுக்கு நடிக்கிறத விட Aunty ரோலுக்கு நடிக்கலாம்.” என ஆவேசமாக கதைத்திருந்தார்.சிம்ரனின் இந்த உரையை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் கிளம்பியது. சிலர், “சிம்ரன் கூறிய ‘டப்பா ரோல்’ என்பது ஜோதிகா சமீபத்தில் நடித்த படத்தினைக் குறிக்கும்” எனவும், சிலர் “இது லைலாவைத் தான் இவ்வாறு கூறுகின்றார்” என்றும் கருத்துக்களை எழுப்பிவருகின்றனர்.இந்த சர்ச்சை தீவிரமாக பரவத் தொடங்கியதனை அடுத்து நடிகை லைலா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.லைலா அதன்போது, “நான் கூட நடித்த நடிகைகளிடம் ஒருபோதும் மரியாதை குறைவாக நடந்து கொள்ள மாட்டேன். அனைவரிடமும் நான் நேர்மையாகத் தான் நடந்து கொள்வேன்.” என்று கூறியிருந்தார்.