சினிமா
அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…

அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி ,குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகிய குட் பேட் அக்லி வெற்றி நடை போட்டு வசூலை வாரி குவித்துள்ளது. படம் முடிந்த கையோடு கார் ரேசிங் என அஜித் கிளம்பியுள்ளார்.மேலும் அடுத்து இவர் தனுஷ் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அஜித்தின் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மைத்திரி மூவி மேக்கேர்ஸ் தயாரிக்கவுள்ளனர்.இருப்பினும் அஜித்தின் ரேசிங் அடுத்த ஆண்டு முடிவடைய இருப்பதால் அது வரை அவர் எந்த ஒரு படத்திலும் கமிட்டாக போவதில்லை என அவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.