Connect with us

இலங்கை

சூரியனின் ஆசியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Published

on

Loading

சூரியனின் ஆசியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

இந்துமதத்தில் நவகிரகங்களில் முக்கிய கடவுளாக இருக்கும் சூரிய பகவான் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட எல்லா செல்வங்களையும் வாரி வழங்கப்போகிறார்

அந்தவகையில் சூரிய கடவுளுக்கு மிகவும் பிடித்த ராசிகள் என்று பார்த்தால் மேஷம், அவரது சொந்த ராசியான சிம்மம், குருவின் நட்பு ராசியான தனுசு ஆகிய ராசிகள் ஆகும். இந்த மூன்று ராசிகளின் மீது சூரியனின் ஆசி எப்போதும் இருக்கும். இந்த ராசிகளுக்கு எவ்வாறு பலன் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.  

Advertisement

சூரிய கடவுளுக்கு பிரியமானவர்கள். லீடர்ஷிப், தைரியம், சுயநம்பிக்கை உங்களுக்கு இயல்பிலேயே இருக்கும். சூரியனின் ஆசீர்வாதத்தால் புகழ், செல்வம், சமூக மரியாதை கிடைக்கும். உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் எந்த தடையையும் முறியடிப்பீர்கள். உங்களுக்கு மே மாத தொடக்கத்தில் இருந்து நல்ல காலம் பிறக்கப்போகிறது.

சூரியனின் சொந்த ராசி சிம்மம். அதனால், இந்த ராசியில் பிறந்தவர்கள் பெருமை, தலைமை, வெற்றிகளை வாரிக் குவிப்பார்கள். வியாபாரம், கல்வி, வேலைவாய்ப்பு அனைத்திலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். மே மாத தொடக்கத்தில் இருந்து நல்ல காலம் பிறக்கப்போகும் சூழலில் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு நீர் அபிஷேகம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மென்மேலும் கிடைக்கும்.

குருவின் நட்பு ராசியான தனுசு ராசிக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. கல்வி, அரசு வேலை, ஆன்மீகம் இவற்றில் முன்னேற்றம் இனி இருக்கும். இதுவரை இருந்த தடைகளை சூரிய பகவான் அகற்றுவார். ஞாயிற்றுக்கிழமை சூரியனை வழிபட்டால் நல்ல எதிர்காலம் உண்டு.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன