இலங்கை
யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு மறியல்

யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு மறியல்
வீடொன்றில் அத்துமீறிய நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அலுவலர் ஒருவர், நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யுவதியொருவரின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு வேளையில் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த யுவதியால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு அவர் உட்படுத்தப்படவுள்ளார்.