இலங்கை
செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் – தமிழ் தேசியப் பேரவை திட்டம்

செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் – தமிழ் தேசியப் பேரவை திட்டம்
தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை, எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்தும் வகையில் செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படும். அத்துடன், தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என்று தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவை யாழ்.மாநகர சபைக்கான முன்மொழிவுகளை உள்ளிடக்கிய செயற்றிட்ட ஆவணத்தை நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தென்மராட்சி சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், வேலணை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் க.நாவலன், யாழ் மாநகர சபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.