சினிமா
சமந்தாவுக்கு ரசிகர்கள் போட்ட condition..! அரங்கத்தை அதிரவைக்கும் பதில் கொடுத்த Sam…!

சமந்தாவுக்கு ரசிகர்கள் போட்ட condition..! அரங்கத்தை அதிரவைக்கும் பதில் கொடுத்த Sam…!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகை சமந்தா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்றிருந்தார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் சமந்தா கலந்து கொண்ட இந்நிகழ்வு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.அந்தவகையில் நிகழ்ச்சியின் போது சமந்தா கூறியதாவது, ” எனக்கு இவ்வளவு ரசிகர்களின் அன்பு கிடைத்தது எல்லாம் கடவுள் கொடுத்த பரிசு மாதிரியே இருக்கிறது” எனக் கூறி மேடையில் நெகிழ்ச்சியடைந்திருந்தார்.மேலும், “நான் தற்போது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்துள்ளன. ஆனால் என்னுடன் நின்ற ரசிகர்களின் அன்பு, என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவு. நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.இந்த விழாவின் போது ஒரு முக்கிய அறிவிப்பும் நடந்திருந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா, மேடையில் பேசும் போது,“எனது அடுத்த படத்தில் நாயகியாக சமந்தாவை தேர்வு செய்துள்ளேன். அவரது நடிப்பு திறமைக்கு நான் மிகுந்த மதிப்பளிக்கின்றேன். அதனால் தான் அவரை மீண்டும் ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்ட நான் தயாராக இருக்கிறேன்” என அறிவித்தார்.இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பல வெற்றிப் படங்களை கொடுத்த சுதா கொங்கராவும், சமந்தாவும் இணையும் இந்தக் கூட்டணி, தமிழ் சினிமாவில் புதிய பரிணாமத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நிகழ்ச்சியில் நடுவர் ஒருவர், சமந்தாவிடம், “நீங்கள் மீண்டும் கல்யாணம் செய்யப்போகிறீர்களா?” என கேட்டபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சத்தமாக, “சமந்தா கல்யாணமே பண்ணக்கூடாது..!” என்று கத்தினார்கள். இதைக் கேட்டு சமந்தா எதுவும் கதைக்காது சிரித்திக் கொண்டார். இந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.