இலங்கை
அமெரிக்காவின் பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் இலங்கையில்

அமெரிக்காவின் பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் இலங்கையில்
உலகில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் நேற்று (24) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த இசை குழுவினர் நேற்று இரவு 10.00 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் இலங்கையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி கொழும்பில் உள்ள வோட்டர் ஏஜ் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.