இலங்கை
சென்னை ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் ; வெற்றியை தனதாக்கிய சன்ரைசர்ஸ் அணி

சென்னை ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் ; வெற்றியை தனதாக்கிய சன்ரைசர்ஸ் அணி
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அதன்படி முதலில் இடம்பெற்ற நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தெடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்று சன் ரைசர்ஸ் அணிக்கு 155 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 18 ஆவது ஓவர் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.