இலங்கை
மின்னல் தாக்கி பலியான விவசாயி

மின்னல் தாக்கி பலியான விவசாயி
வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் 63 வயதுடைய அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த நபர் வேறொரு நபருடன் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததாகவும், மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தள்ளனர்.
சடலம் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.