இலங்கை
கிளிநொச்சியில் சிக்கிய பெண்ணிடம் 20 கிலோ கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் சிக்கிய பெண்ணிடம் 20 கிலோ கஞ்சா மீட்பு
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா பதுக்கப்பட்டுள்ளது என்று கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரான பெண்ணுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.