சினிமா
இனி கனவிலும் நினைக்க கூடாது; காஷ்மீர் தாக்குதலால் விமான நிலையத்தில் சீறி எழுந்த ரஜினி..!

இனி கனவிலும் நினைக்க கூடாது; காஷ்மீர் தாக்குதலால் விமான நிலையத்தில் சீறி எழுந்த ரஜினி..!
காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகளாக வந்த 26 பேர் உயிரிழந்ததோடு, பெரும்பாலான ஹிந்து ஆண்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.இந்த சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தனது ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீர் தாக்குதல் குறித்து பதிலளித்திருந்தார்.அதன்போது, தீவிரமாகக் கோபமடைந்த ரஜினிகாந்த், “இது தீவிரவாத செயல். கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி நிலவ ஆரம்பித்தது, அது சில எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. அதற்காக அமைதியை முறியடிக்கவே இப்படி அசிங்கமான செயல்களை செய்கிறார்கள். இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியவர்களையும், பின்னணி அமைப்புகளையும் உடனே கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.மேலும் அவர், “அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கட்டாயமான பாடம் சொல்லிக்கொடுப்பது அவசியம். மீண்டும் இதுபோன்ற செயல்களை கனவிலும் செய்ய நினைக்க முடியாத அளவிற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதனை செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” எனவும் தெரிவித்திருந்தார்.ரஜினியின் இந்தப் பதில்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தற்போது நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்த தாக்குதலுக்கான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பாதுகாப்பு பிரிவுகள் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.