இலங்கை
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றினர். அதில் 2,53,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகும்.
பரீட்சைகள்
நாடு முழுவதும் 2,312 மத்திய நிலையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.