தொழில்நுட்பம்
அள்ளித் தரும் பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் திட்டங்கள்; செக் பண்ணி பாருங்க!

அள்ளித் தரும் பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் திட்டங்கள்; செக் பண்ணி பாருங்க!
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் விரைவில் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025-ம் ஆண்டு இறுதிக்குள் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பி.எஸ்.என்.எல் (bsnl) நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. இப்போதும் கூட மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டத்துக்கும் மக்களிடையே நல்ல வரவேற்புள்ளது. மேலும் இந்நிறுவனம் கூடிய விரைவில் 4G சேவையை கூட அறிமுகம் செய்ய உள்ளது. கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளைத் தரும் 3 திட்டங்களை வைத்து உள்ளது பி.எஸ்.என்.எல். அந்த 3 திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா, வேலிடிட்டி 80 நாட்கள். ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160 ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்.டி.டி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த ப்ரீபெய்ட் திட்டம். மேலும், தினமும் 100 எஸ்.எம்.எஸ் கிடைக்கும். தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைகிறது.ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid plan) தினசரி 3 ஜிபி டேட்டா, வேலிடிட்டி 84 நாட்கள். ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்.டி.டி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்.எம்.எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம்.