Connect with us

பொழுதுபோக்கு

‘ஹோம்பௌண்ட்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பதிக்கும் மார்ட்டின் ஸ்கார்சஸி – ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Published

on

Homebound movie

Loading

‘ஹோம்பௌண்ட்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பதிக்கும் மார்ட்டின் ஸ்கார்சஸி – ஆச்சரியத்தில் ரசிகர்கள்

ஹாலிவுட் சினிமாவின் ஜாம்பவானாக கருதப்படுபவர் மார்டின் ஸ்கார்சஸி. இவர், நீரஜ் கய்வானின் இரண்டாவது திரைப்படமான ‘ஹோம்பௌண்ட்’ படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இது இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் எழுத்து பணியில் இருந்தே மார்டின் ஸ்காசஸி அங்கம் வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், எடிட்டிங் பணியின் போதும் சில திருத்தங்களை செய்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் கான்ஸ் விழாவில் திரையிடுவதற்கு ‘ஹோம்பௌண்ட்’ படம் தேர்வாகி உள்ளது.  ஆங்கிலத்தில் படிக்கவும்: Martin Scorsese and Karan Johar are set to join hands; Neeraj Ghaywan is responsible for unlikely collaboration இது தொடர்பான அறிக்கையை ஸ்கார்சஸி வெளியிட்டுள்ளார். அதில், “2015ல் நீரஜின் முதல் படமான ‘மசான்’ திரைப்படத்தை பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது, அடுத்த கதையை நாம் படித்தேன். அந்தக் கதையும் எனக்கு பிடித்ததால், அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன். இப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்கு அற்புதமான படைப்பை நீரஜ் வழங்கியுள்ளார். இப்படம் கான்ஸ் விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். A post shared by Karan Johar (@karanjohar) இதனை படத்தின் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும், “‘ஹோம்பௌண்ட்’ ஒரு அற்புதமான திரை அனுபவம். மார்டின் ஸ்கார்சஸி போன்ற ஜாம்பவான், தனது அனுபவம் மற்றும் ஞானத்தை நீரஜின் திரைப்படத்திற்கு வழங்கியுள்ளார். கான்ஸ் விழாவில் உலகம் முழுதும் இருக்கும் சினிமா ரசிகர்களுக்கு இப்படத்தை காண்பிக்க ஆர்வமாக இருக்கிறோம்” என்று கரண் ஜோஹர் கூறியுள்ளார்.இது குறித்து தனது கருத்துகளை கெய்வான் தெரிவித்துள்ளார். அதன்படி, “மார்டின் ஸ்கார்சஸி போன்ற ஜாம்பவான் எங்கள் திரைப்படத்தில் இணைந்ததை, என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு எங்களை அறிமுகப்படுத்திய எங்கள் இணை தயாரிப்பாளரான மெலிடா டோஸ்கானுக்கு நான் மிகவும் கடமைபட்டுள்ளேன். திரைக்கதை மற்றும் எடிட்டிங் ஆகியவற்றில் மார்டின் ஸ்கார்சஸி எங்களை வழிநடத்தியுள்ளார். நமது கலாசாரம் குறித்து அவர் அறிந்து கொண்டார். இந்த அனுபவத்தை எங்களால் மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.இஷான் கட்டர் மற்றும் விஷால் ஜெத்வா நடித்துள்ள ‘ஹோம்பௌண்ட்’ படம், இந்த ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. ஏற்கனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இதே கான்ஸ் விழாவில் கெய்வானின் ‘மாசான்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதனிடையே, நெட்ஃபிக்ஸ் தொடரான ​​’சேக்ரட் கேம்ஸ்’ மற்றும் பிரைம் வீடியோ தொடரான ‘மேட் இன் ஹெவன்​​’ போன்றவற்றில் அவர் பங்காற்றியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன