பொழுதுபோக்கு
வடிவேலு ரீ-என்ட்ரி: ஃபேமிலி ரசிகர்களை ஈர்க்கும் கேங்கர்ஸ்; 2-ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வடிவேலு ரீ-என்ட்ரி: ஃபேமிலி ரசிகர்களை ஈர்க்கும் கேங்கர்ஸ்; 2-ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
அரண்மனை 4 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கததில் வெளியாகியுள்ள படம் கேங்கர்ஸ். சுந்தர்.சி வடிவேலு கூட்டணி 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ள நிலையில், கேத்ரின் தெரசா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வாணி போஜன், பகவதி பெருமாள், மைம் கோபி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு, சி.சத்யா இசையமைத்திருக்கிறார்.அரண்மனை 4 படம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருந்தாலும், கடந்த பொங்கல் தினத்தில் வெளியான விஷாலின் மதகஜராஜா திரைப்படம் சுந்தர்.சிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது, 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்றாலும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றபடி இருந்த கதை திரைக்கதை மற்றும் சந்தானம் நடிப்பில் வந்த காமெடி காட்சிகள் படத்திற்கு ப்ளாசாக அமைந்தது. அதேபோல் வடிவேலு நடிப்பில் வெளியான மாமன்னன் படம் வெற்றிப்படமாக அமைந்தது.மாமன்னன் படத்தில் வடிவேலு சீரியஸ் கேரக்டரில் நடித்தததால் அந்த படத்தில் காமெடிக்கு வழியில்லா நிலையில், வடிவேலுவின் அடுத்தபடம் யாருடன் என்ற கேள்வி எழுந்தது. அப்போது 15 ஆண்டுகளுக்கு பின்பு சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் என்ற படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அப்போதே இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஏப்ரல் 24-ந் தேதி படம் வெளியானது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப கேங்கர்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதேபோல், வடிவேலு மீண்டும் திரும்பி வந்துவிட்டார் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாட தொடங்கியுள்ளனர். உலகம் முழுக்க 600 தியேட்டர்களில் வெளியான கேங்கர்ஸ் திரைப்படம், திரைக்கு வந்த முதல் நாளில் உலக அளவில் 2 கோடி வசூலித்த நிலையில், நேற்று இரண்டாவது நாள் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அந்த வகையில் 2 நாளில் கேங்கர்ஸ் படம் மொத்தம் 4.2 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது. ஃபேமிலி ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளால், சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை தினங்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.