இலங்கை
புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு
தற்போது வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வருபவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்காக மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தில் பங்குகொள்ளுமாறு புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இனவாத அரசியல் இனியும் எமக்கு வேண்டாம்.
கடந்த காலங்களில் அனைத்து சலுகைகளையும் அமைச்சர்களும், ஜனாதிபதிகளுமே பெற்றுக்கொண்டனர்.
பொதுமக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை.
நாங்கள் கொள்ளையடிக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இதுவரை திருடியவர்கள் குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றீர்கள் என கேட்கின்றனர்.
கண்டிப்பாக அவர்களை அடையாளங்கண்டு நீதிமன்றில் முன்னிறுத்தி தண்டனை பெற்றுத்தருவோம்.
தற்போது பல்வேறு மாகாணங்களில் உள்ள அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.