இலங்கை
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 242 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.