இந்தியா
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; குஷியில் மாணவர்கள்!

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; குஷியில் மாணவர்கள்!
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் வெயில் கொளுத்துவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நமச்சிவாயம் நாளை ஏப்.28 முதல் ஜூன் 1 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இந்த விடுமுறையில் அடங்கும். மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் (02.6.2025) தேதி முதல் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறையால் மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.முன்னதாக, தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு கடந்த 24ம் தேதி முடிந்த நிலையில், கடந்த 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு ஜூன் 2ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.