இலங்கை
நடு வீதியில் துரத்தி துரத்தி தாக்குதல் ; தகாத உறவால் நேர்ந்த விபரீதம்

நடு வீதியில் துரத்தி துரத்தி தாக்குதல் ; தகாத உறவால் நேர்ந்த விபரீதம்
கிரிபத்கொட நகர பகுதியில் ஒருவர் பலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்ணொருவருடன் இருந்த தகாத உறவு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பிரதான வீதியில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே இந்த குழுவினர் அந்த நபரை துரத்திச் சென்று தாக்குவது காணொளி ஒன்றில் பதிவாகியிருந்ததுடன், குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.