இலங்கை
லஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் ரணில்

லஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முன்னிலையாகியுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்தபோது சாமர சம்பத் தசாநாயக்கவால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவைக் கடந்த 17ஆம் திகதி லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் அவர் முன்னிலையாகத நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.