Connect with us

விளையாட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி – காது கேளாத, வாய் பேச முடியாத வீரர்கள் போட்டியில் பங்கேற்பு

Published

on

கோவை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி

Loading

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி – காது கேளாத, வாய் பேச முடியாத வீரர்கள் போட்டியில் பங்கேற்பு

கோவையில் மாவட்ட அளவிலான நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் காது கேளாத, வாய் பேச இயலாத, வீர்ர்கள் அசத்தலாக விளையாடினர்.கோவையில் ஒவ்வொரு ஆண்டும்  காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக கோயம்புத்தூர் காது கேளாத வாய் பேச இயலாதோர் சங்கம் சார்பாக கோவை கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது சீசனாக நடைபெற்ற காது கேளாத வாய் பேச இயலாதோர்களுக்கான  கோவை  கிரிக்கெட் லீக் போட்டி பெரியநாயக்கன்பாளையம் பாளையம் பகுதியில்  நடைபெற்றது.நாக் அவுட் போட்டிகளாக நடைபெற்ற இதில் இளைஞர் அணியினர், மூத்த அணி மற்றும் பெண்கள் தனி பிரிவு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.பல்வேறு விளையாட்டுகளில் சாதித்து வரும் காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் வெற்றி தோல்வியை கடந்து போட்டியில் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர். இதில் இளையோருக்கான போட்டிகளில் உக்கடம் கிரிக்கெட் டவர்ஸ் மேட்டுப்பாளையம் கிரிக்கெட் தண்டர்ஸ், காந்திபுரம் கிரிக்கெட் கிராஸ்கட் ரோடு ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.இதே போல லெஜன்ட்ஸ் பிரிவில் சரவணம்பட்டி ஐ.டி.பார்க் அணி முதல் இடத்தையும்,கோவை சூப்பர் கிங்ஸ் இரண்டாம் இடத்தையிம் பிடித்தனர். மேலும் பெண்கள் பிரிவில் விமன் வாரியர் முதல் இடத்தையும்,விமன் விங்ஸ் கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி  கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகளை சிறப்பு விருந்தினர்கள்  வழங்கி கவுரவித்தனர்.பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன