Connect with us

தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பின் 5 புதிய சீக்ரெட் அம்சங்கள்: என்னனு தெரியுமா?

Published

on

WhatsApp

Loading

வாட்ஸ்அப்பின் 5 புதிய சீக்ரெட் அம்சங்கள்: என்னனு தெரியுமா?

பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், உரையாடல்களை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. உங்கள் சுயவிவரத்திற்கு அங்கீகரிக்கப்படாத அணுகல், தேவையற்ற குழு அழைப்பிதழ்கள் (அ) வாட்ஸ்அப்பில் செய்தி காட்சித்தன்மை குறித்த கவலைகள் இருந்தால், சரியான அமைப்புகளை இயக்குவது போதுமானது. ஒவ்வொரு வாட்ஸ்அப் பயனரும் தங்கள் சாட், அக்கவுண்ட் பாதுகாப்பாக வைத்திருக்க செயல்படுத்த வேண்டிய 5 முக்கிய தனியுரிமை அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: 5 privacy features you should enable on WhatsApp1. மேம்பட்ட சாட் தனியுரிமை:வாட்ஸ்அப்பில் மேம்பட்ட தனியுரிமை என்பது கடைசியாக எப்போது வாட்ஸ்அப் வந்தார்? last seen (அ) DP படத்தை மறைப்பது போன்ற தனியுரிமை அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட அம்சங்களைக் குறிக்கிறது. வாட்ஸ்அப்பின் மேம்பட்ட சாட் தனியுரிமை (Advanced Chat Privacy) அம்சம், பயனர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாகவே பெறுநரின் கேலரியில் சேமிக்கப்படுவதை கட்டுப்படுத்த உதவும். இதுமட்டுமின்றி, முழு சாட் வரலாற்றையும் ஏற்றுமதி செய்வதை தடுப்பது மற்றும் இன்னும் பல தனியுரிமை சார்ந்த கட்டுப்பாடுகளையும் இந்த அம்சம் வழங்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேம்பட்ட சாட் தனியுரிமையை செயல்படுத்த, குறிப்பிட்ட சாட் பெயரைத் தட்டவும், பின்னர் அட்வான்ஸ்டு சாட் பிரைவேசி-ஐ தேர்ந்தெடுக்கவும்.2. எண்ட் டூ எண்ட் கிரிப்டட் பேக்அப்:வாட்ஸ்அப்பில் எண்ட் டூ எண்ட் கிரிப்டட் பேக் அப் என்பது Android-ல் Google Drive (அ) iPhone-ல் iCloud சேமிக்கப்பட்ட உங்கள் சேட் வரலாறு மற்றும் மீடியாவை எண்ட் டூ எண்ட் கிரிப்டட் பாதுகாக்கும் அம்சமாகும். உங்களால் மட்டுமே காப்புப்பிரதியை அணுக முடியும். WhatsApp, Google (அ) Apple கூட அதன் கண்டெண்டுகளைப் படிக்க முடியாது. இதற்கென ஒரு தனித்துவ கடவுச்சொல் (அ) 64 இலக்க என்கிரிப்ட் கீ பயன்படுத்துகிறது. இது உங்கள் காப்புப்பிரதியை யாராவது ஹேக் செய்தாலும் உங்கள் பேக்கப் சேமிப்பு சேவையை கூடுதல் பாதுகாப்புடன் பாதுகாக்கிறது இந்த அம்சத்தை இயக்க:வாட்ஸ்அப்பைத் திறக்கவும் > Settings > Chats > Chat Backup என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.”End-to-End Encrypted Backup” என்பதைக் கிளிக் செய்து “Turn On” என்பதைத் தேர்வுசெய்யவும்.அதன்பிறகு, ஒரு கடவுச்சொல்லையோ (அ) 64 இலக்க குறியாக்க விசையையோ அமைக்கச் சொல்லும்.நீங்கள் உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தியவுடன், வாட்ஸ்அப் உங்கள் காப்புப்பிரதியை குறியாக்கம் செய்து பேக்கப்பிற்கு பதிவேற்றத் தொடங்கும்.3. யார் உங்களை குழுக்களில் சேர்க்கலாம் என்பதை கட்டுப்படுத்தலாம்:இந்த அம்சம், யார் உங்களை குழு உரையாடல்களில் சேர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க உதவுகிறது. இயல்பாக, உங்கள் கைபேசி எண்ணை அறிந்த யாரும் உங்களை ஒரு குழுவில் சேர்க்க முடியும். ஆனால் இந்த அமைப்பு, உங்களுக்கே அதைப் பற்றிய கட்டுப்பாட்டை வழங்கி, தேவையற்ற குழுக்களில் சேர்ப்பதையோ (அ) மோசடி குழுக்களைத் தவிர்க்க உதவுகிறது. இதில், நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய 3 விருப்பங்கள் உள்ளன:Everyone (எல்லாரும்)My Contacts (என் தொடர்புகள்)My Contacts Except (என் தொடர்புகள், சிலரை தவிர்த்து) உங்களை சேர்க்க அனுமதி இல்லாத ஒருவர் முயற்சி செய்தால், அவர்கள் நேரடியாக சேர்க்க முடியாது; மாற்றாக, உங்களிடம் அழைப்பை அனுப்ப வேண்டும். அதனை நீங்கள் ஏற்கவோ (அ) புறக்கணிக்கவோ முடியும்.இந்த அம்சத்தை இயக்க:WhatsApp > Settings > Privacy > Groups என்பதுக்குச் சென்று உங்கள் விருப்பமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.4. தெரியாத அழைப்புகளை நிராகரித்தல்:இந்த தனியுரிமை அம்சம், உங்கள் தொடர்புகளில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை தானாகவே மியூட் செய்யும். அந்த அழைப்புகள் உங்கள் அழைப்பு பதிவிலும் அறிவிப்புகளிலும் காணப்படும், ஆனால் உங்கள் கைபேசி ஒலிக்கவோ அதிரவோ முடியாது. இது ஸ்பார்ம், மோசடி மற்றும் தேவையற்ற தொந்தரவுகளை குறைக்கும், ஆனால் அழைப்பாளரை முற்றிலும் தடுக்காது. நீங்கள் அவ்வாறு அழைத்த எண்ணிலிருந்து மிஸ் செய்யப்பட்ட அழைப்புகளைப் பின் பார்க்கவும், தேவையெனில் திரும்ப அழைக்கவும் முடியும்.இந்த அம்சத்தை இயக்க:WhatsApp > Settings > Privacy > Calls சென்று “Silence Unknown Callers” என்பதை இயக்கவும். 5. “ஒருமுறை பார்வை” அம்சம்:இந்த வாட்ஸ்அப் அம்சம், நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெறுபவரால் ஒருமுறை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறது. அதைப் பார்வையிட்டவுடன், அது உரையாடலில் இருந்து மறைந்துவிடும். அதை மீண்டும் பார்க்கவோ, சேமிக்கவோ, அனுப்பவோ முடியாது. இந்த அம்சம் கூடுதல் தனியுரிமையை வழங்குகிறது, முக்கியமான அல்லது தனிப்பட்ட உள்ளடக்கங்கள் திட்டமிடப்படாத விதமாக சேமிக்கப்படாமலும், பகிரப்படாமலும் இருக்க உதவுகிறது. இதை பயன்படுத்த, ஒரு உரையாடலில் புகைப்படம் (அ) வீடியோ அனுப்பும்போது, “1” ஐகானைத் தட்டவும். பெறுபவர் அந்த மீடியாவைப் பார்ப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பை மட்டும் பெறுவார். அதன்பிறகு அந்த மீடியா கிடைக்காது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன