பொழுதுபோக்கு
முத்துவை கொல்ல நடக்கும் சதி; பின்னணியில் ப்ளான் போட்ட ரோஹினி; அடுத்து என்ன?

முத்துவை கொல்ல நடக்கும் சதி; பின்னணியில் ப்ளான் போட்ட ரோஹினி; அடுத்து என்ன?
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில், முத்துவை கொலை செய்ய திட்டம் தீட்டப்படும் நிலையில், குடும்பத்தினருக்கு ஸ்ருதி அதிர்ச்சி கொடுக்கிறார். அதே சமயம் ரோஹினி மீண்டும் அவமானப்படுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சிட்டி செல்வதற்கெல்லாம் கேட்கும் ரோஹினி, முத்துவின் கார் சாவியை எடுத்து சிட்டியிடம் கொடுத்துவிடுகிறார். முத்து ஆசிரமத்திற்கு துணிகளை எடுத்து செல்வதற்காக கிளம்ப, விஜயா தனது புடவைகளை தர முடியாது என்று சொல்கிறார். இதற்கு ரோஹினியும் அவருக்கு சப்போர்ட்டாக பேச, அவரை அவமானப்படுத்தும் வகையில் எனக்கு சப்போர்ட்டா பேச சொன்னேனா? என் வேலையை பாரு என்று விஜயா சொல்லி விடுகிறார்.அதேபோல்மனோஜ்ஜூம் ரோஹினியிடம் திமிராக பேசுகிறார். அதன்பிறகு முத்து ஆசிரமத்திற்கு துணிகளை கொடுப்பது பற்றி செண்டிமெண்டாக பேச, ஸ்ருதி, தனது துணைகளை கொடுப்பதாக சொல்கிறார், இதை பார்த்த ரோஹினி கடுப்பில் நின்றுகொண்டிருக்க, மறுபக்கம், சிட்டி, முத்துவின் காரில் பிரேக் வயரை கட் செய்துவிட்டு,ஆயில் இறங்கினால் தான் நாம் நினைத்தது நடக்கும். அவன் வீட்டு பக்கத்திலேயே நின்னு என்ன நடக்குதுனு சொல்லுங்க என்று சொல்கிறார்.அடுத்து முத்துவும் மீனாவும் துணிகளை காருக்கு கொண்டு வந்து டிக்கில் வைக்கின்றனர். இதை மாடியில் இருந்து ரோஹினி பார்த்துக்கொண்டு இருக்க, மீனா தனது தோழிகளுடன் பேசிக்கொண்டு இருக்க, முத்துவும் ஆயில் லீக் ஆவதை பார்க்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்து வீடுக்கு வரும் மீனா, கிச்சனுக்கு போக, அங்கு ஸ்ருதி சமையல் கத்துக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த மீனா ஹெல்ப் பண்ணவா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாள்.இதை கேள்விப்பட்டு ரவியும் கிச்சனுக்கு சொல்ல, உன் உதவியும் தேவையில்லை என்று அவனையும் வெளியில் அனுப்பும் ஸ்ருதி உப்புமா செய்திருப்பதாக சொல்லி போடுகிறாய். இதை சாப்பிட்டு பார்க்கும் மீனா நல்லா இருக்கு என்று சொல்ல, ரவி உண்மையை சொல்லிவிட்டு, ஸ்ருதிக்கு ஊட்டிவிட, அவளுக்கு அது பிடிக்காமல் போகிறது. இதை பார்த்த விஜயா, மீனாவிடம் சமையல் கத்துக்கோ, அவளுக்கு திமிர் அதிகம் அதை கத்துக்காத என்று சொல்ல, சிலரிடம் பொய் பேசும் திறமை இருக்கு அந்தப் பக்கம் போகாத என்று முத்து ஜாடை மாடையாக பேசுகிறார்.அந்த நேரத்தில் முத்துவின் கார் மீது முட்டை வியாபாரி முட்டையையும் போட்டு உடைத்து விட, அவர் மறைக்காமல் முத்துவிடம் வந்து சொல்லி மன்னிப்பு கேட்கிறார். இதனால் முத்து கோபப்பட, அதற்கு மீனா உங்களுக்கு லேட்டு தான் ஆகுது ஆனா அவருக்கு வருமானமே போச்சு என்று சொன்னதும் முத்து அமைதியாக இருக்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.