சினிமா
“மாமன்” படத்தைப் பார்த்தால் நான் நேருல சந்திப்பேன்..! சூரியின் அதிரடிக் கருத்து..!!

“மாமன்” படத்தைப் பார்த்தால் நான் நேருல சந்திப்பேன்..! சூரியின் அதிரடிக் கருத்து..!!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகர் சூரி. கடந்த காலங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் கலக்கி வருகின்றார். அந்த வகையில், இவர் நடித்து வெளிவரவுள்ள ‘மாமன்’ படம் குறித்து சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மிகுந்த உணர்வு பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.சூரி கூறியதாவது, “சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்பட்டு குடும்பங்களோட 2 அல்லது 5 வருசமா கதைக்காம இருக்கிறவங்க எல்லாரும் இந்தப் படத்தைப் பார்த்தால் கண்டிப்பா கதைப்பீங்க என்றார். மேலும் இந்தப் படம் மூலம் நல்லது நடந்திருச்சு என்று எனக்கு போன் பண்ணி யாராவது சொன்னால் நான் அவங்கள நேருல வந்து சந்திப்பேன்.” என்று தெரிவித்திருந்தார்.இவ்வாறு அவர் உணர்வுபூர்வமாக கூறியதும், நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் சூரியை கைதட்டிப் பாராட்டினார்கள். அவர் கூறிய இந்த வரிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘மாமன்’ திரைப்படம், உணர்வு பூர்வமான குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய நோக்கம், குடும்ப உறவுகளுக்கிடையிலான பகையை மறந்து, ஒற்றுமையுடன் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த வகையில், சூரி இவ்வமைப்பில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என்றே கூறவேண்டும்.