Connect with us

பொழுதுபோக்கு

ஹிட்டான படத்துக்கு சம்பளம் இல்லை; அட்வான்ஸ் செக்கை இன்றுவரை மாற்றாத அஜித்: எந்த படம் தெரியுமா?

Published

on

Ajith Maanu

Loading

ஹிட்டான படத்துக்கு சம்பளம் இல்லை; அட்வான்ஸ் செக்கை இன்றுவரை மாற்றாத அஜித்: எந்த படம் தெரியுமா?

சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற, சரண், அஜித் தான் இயக்கிய ஒரு படத்திற்காக சம்பளமே வாங்காமல், தயாரிப்பாளர் கொடுத்த செக்கையும் இதுவரை வங்கியில் மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். அது என்ன படம் என்று தெரியுமா?இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். அதனைத் தொடர்ந்து அமர்க்களம், ஜே.ஜே, அட்டகாசம், அசல், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக ஆரவ் நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார்.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சரண், அடுத்து காதல் மன்னன் படத்தை இயக்க தயாரானார். இந்த படத்தை, வெங்கடேஷ்வராலயம் என்ற நிறுவம் சார்பில், சுதிர் குமார் என்பது தயாரித்திருந்தார். அஜித்துடன் இணைந்து, புதுமுகம் மானு, விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், கரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதே சமயம் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில், படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முன்வரவில்லை. இதற்காக 98 முறை காதல் மன்னன் படத்தை பிரீமியர் காட்சி திரையிட்டுள்ளனர். ஆனாலும், படத்தின் பட்ஜெட்டுக்கு குறைவாகவே விலைக்கு கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அஜித், அடுத்த படமும் உங்களுக்காக நடிக்கிறேன். அறிவிப்பை வெளியிடுங்கள் உங்களுக்கு பயன்படும் என்று தாயரிப்பாளரிடம் கூறியுள்ளார்.அப்போது டைட்டில் மட்டுமே வைத்திருந்த இயக்குனர் சரண், படத்தின் தலைப்பை வைத்து காதல் மன்னன் படத்தின் போஸ்டருடன் இந்த படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ஆனாலும் குறைந்த விலைக்கே விற்கப்பட்ட காதல் மன்னன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் தயாரிப்பாளருக்கு லாபம் இல்லாததால், அவர் தயாரிப்பில் சரண் இயக்கிய 2-வது படத்திலும் அஜித் நாயகனாக நடித்திருந்தார். அந்த படம் தான் அமர்க்களம்.காதல் மன்னன் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், அமர்க்களம் படத்திற்காக, அவர் கொடுத்த அட்வான்ஸ் தொகைக்காக செக்கை வாங்கிக்கொண்ட அஜித் இன்றுவரை அந்த செக்கை மாற்றாமல் பத்திரமாக வைத்துள்ளார். அதே சமயம், அமர்க்களம் படத்திற்காக அவர் கடைசி வரை சம்பளமே வாங்கவில்லை. காதல் மன்னன் கொடுத்த நஷ்டத்தை அமர்க்களம் 2 மடங்கு லாபம் கொடுத்து சரி செய்தது என்று சரண் கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன