பொழுதுபோக்கு
மகள் திருமணம் நடக்க ‘மகாராஜா’ படம் தான் காரணம்; விஜய் சேதுபதி செய்த உதவி: மனம் திறந்த அனுராக் காஷ்யப்!

மகள் திருமணம் நடக்க ‘மகாராஜா’ படம் தான் காரணம்; விஜய் சேதுபதி செய்த உதவி: மனம் திறந்த அனுராக் காஷ்யப்!
பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் அனுராக் காஷ்யப். வித்தியாசமான கதையம்சங்கள் மற்றும் யதார்த்தமான திரைக்கதைக்காக அறியப்படும் இவர், தற்போது நடிகராகவும் தென்னிந்தியத் திரையுலகில் தனது காலடியை பலமாகப் பதித்து வருகிறார். இயக்குநர் என்ற அடையாளத்தைத் தாண்டி, நடிகராகவும் அவர் பெறும் வரவேற்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ஆங்கிலத்தில் படிக்க: Anurag Kashyap says Vijay Sethupathi ‘helped’ him with Maharaja role because he wanted to get his daughter married: ‘I couldn’t afford it otherwise’அனுராக் காஷ்யப்பின் தென்னிந்திய சினிமா அறிமுகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஆர்.அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான அதிரடித் திரைப்படமான ‘இமைக்கா நொடிகள்’ மூலம் நிகழ்ந்தது. இந்தத் திரைப்படம் அவருக்கு தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய பாதையைத் திறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து பல தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், அவர் அவற்றில் அதிக கவனம் செலுத்தவில்லை.அதே சமயம் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் அனுராக் காஷ்யப்பின் நடிப்புத் திறனை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றது. இப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கேரக்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது மிரட்டலான நடிப்பும், கதாபாத்திரத்தின் ஆழமான தன்மையும் அனைவரையும் கவர்ந்தது.இதனிடையே, சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பேசிய அனுராக் காஷ்யப் ‘மகாராஜா’ படத்தில் நடிக்க விஜய் சேதுபதி எவ்வாறு தன்னை ஊக்குவித்தார் என்பது குறித்து மனம் திறந்து பேசினார். “இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, எனக்கு நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் அவற்றில் ஆர்வம் காட்டவில்லை.’கென்னடி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருந்தபோது, என் பக்கத்து வீட்டுக்காரர் மூலம் விஜய் சேதுபதியை அடிக்கடி சந்தித்தேன். அப்போது அவர் ஒரு அற்புதமான கதையைப் பற்றி கூறினார். அந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியதாகவும் சொன்னார். முதலில் நான் மறுத்துவிட்டேன். ஆனால், ‘கென்னடி’ படத்தில் எனக்குள் இருந்த ஒரு நல்ல விஷயத்தை அவர் கண்டறிந்து பாராட்டினார். ‘கென்னடி’ படத்தில் அவருக்கு ஒரு ‘தேங்க் யூ’ கார்டு கூட இருக்கிறது. அதனால் அவரால் எனக்கு இல்லை என்று சொல்ல முடியவில்லை.அடுத்த வருடம் என் மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது, அதற்கான செலவுகளை என்னால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை என்று அவரிடம் தயக்கத்துடன் கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி, ‘நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்’ என்று உறுதியளித்தார். அப்படி உருவானதுதான் ‘மகாராஜா’,” என்று அனுராக் காஷ்யப் சிரித்துக்கொண்டே கூறினார். அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப், தனது நீண்டகால காதலரான ஷேன் கிரேகொயரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.’மகாராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அனுராக் காஷ்யப் தென்னிந்திய சினிமாவில் மேலும் தீவிரமாக நடிக்கத் தொடங்கினார். வெற்றிமாறனின் வரலாற்றுப் பின்னணியிலான அரசியல் க்ரைம் திரில்லர் படமான ‘விடுதலை பாகம் 2’-ல் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். மேலும், ஆஷிக் அபுவின் மலையாள அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான ‘ரைபிள் கிளப்’ படத்திலும் கடந்த ஆண்டு அவர் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி, ஆதித்யா தத் இயக்கிய ‘பேட் காப்’ என்ற இந்தி க்ரைம் திரில்லர் தொடரிலும் அவர் வில்லனாக நடித்திருந்தார்.அடுத்ததாக அவர் அதிவி சேஷ் நடிக்கும் ‘டகோயிட்: எ லவ் ஸ்டோரி’ என்ற இந்தி-தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் நடிப்பை “மோசமானது” என்றும் “சினிமாவுக்கு ஏற்றதல்ல” என்றும் கருதிய அனுராக் காஷ்யப், தற்போது நடிப்பை மிகவும் விரும்புவதாகக் கூறுகிறார். காரணம், திரைப்படத் தயாரிப்பில் தற்போது போதிய ரிஸ்க் எடுக்கப்படுவதில்லை என்பது அவரது கருத்தாகும். மேடை நாடகங்களில் பல வருடங்கள் நடித்திருந்தாலும், ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பது தனக்குச் சரிவராது என்று நினைத்துள்ளார்..”திரையில் என்னை விட மோசமான நடிகரை நான் பார்த்ததில்லை,” என்று தனது ஆரம்பகால நடிப்பு முயற்சிகள் குறித்து கூறிய அவர், “எனது மோசமான நடிப்பிலிருந்து நடிகர்களை எப்படி இயக்கக் கூடாது, அவர்களிடம் இருந்து எப்படி சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவது என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.சுவாரஸ்யமாக, அனுராக் காஷ்யப்பின் முதல் நடிப்பு வாய்ப்பு, அவர் இயக்குநராக சந்தித்த மிகப்பெரிய தோல்வியான ‘பாம்பே வெல்வெட்’ (2015) படத்திற்குப் பிறகு வந்தது. ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்த இப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. “பாம்பே வெல்வெட் படத்தால் எனக்கு ஸ்டுடியோவுக்கு (ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்) நிறைய கடன் இருந்தது. அந்த ஸ்டுடியோ முருகதாஸ் இயக்கிய ‘அகிரா’ என்ற மற்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தது.நான் நடித்தால், எனக்கு இருந்த கடனை தள்ளுபடி செய்வதாக அவர்கள் கூறினார்கள். என் வாழ்க்கையில் நான் செய்த மிக எளிதான ஒப்பந்தம் அதுதான். நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன், என் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆக, நான் தான் அதிக சம்பளம் வாங்கிய முதல் சம்பளம் வாங்காத அறிமுக நடிகர்,” என்று அனுராக் காஷ்யப் நகைச்சுவையாகக் கூறினார்.