பொழுதுபோக்கு
’10 படம் இல்ல… அதுக்கு மேல’: லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

’10 படம் இல்ல… அதுக்கு மேல’: லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் தொடங்கி லியோ வரை, ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்துவந்த லோகேஷ், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து “கூலி” என்ற படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத்பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.அண்மையில், யூடியூப் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளார். கூலி படத்தின் உருவாக்கம், ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். அந்த சுவாரஸ்யமான உரையாடலின் முக்கிய பகுதிகளை இந்தப் பதிவில் காணலாம்.திடீர் திருப்பம்: “கூலி” உருவான கதை:முதலில் வேறொரு கதையை ரஜினிக்காக யோசித்து வைத்திருந்த லோகேஷ் கனகராஜுக்கு, அந்த கதை சில காரணங்களால் கைகூடவில்லை. அப்போதுதான் எதிர்பாராத விதமாக “கூலி” திரைப்படம் உருவாகும் வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து லோகேஷ் கூறுகையில், “அது ஒரு திடீர் திருப்பம். ஆனால், ரஜினி சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற கனவு எனக்குள் எப்போதும் இருந்தது. ‘கூலி’ அந்த கனவை நனவாக்கியுள்ளது,” என்றார் உற்சாகமாக.சூப்பர் ஸ்டார் ஸ்டைல்: ரஜினியின் பணிவுரஜினிகாந்த் போன்ற ஒரு பெரிய நடிகருடன் பணியாற்றுவது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு லோகேஷ் அளித்த பதில் ஆச்சரியமளிக்கிறது. “ரஜினி சார் ஒரு குழந்தை மாதிரி. படப்பிடிப்புக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வசனங்களை கேட்பார். அவ்வளவு பெரிய ஸ்டார், ஆனா அவர்கிட்ட ஒரு பந்தாவே இருக்காது. ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு பணிவா அணுகுவார்,” என்று ரஜினியின் எளிமையை வியந்து பேசினார் லோகேஷ். ஒருமுறை வசனத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தலாமா என்று ரஜினிகாந்த் அவரிடம் கேட்டதை நினைவு கூர்ந்த லோகேஷ், சூப்பர் ஸ்டாரின் மரியாதையை பாராட்டினார்.2 வருட பயணம்: “கூலி” ஒரு வாழ்க்கை பாடம்”கூலி” படத்திற்காக கடந்த 2 வருடங்களாக உழைத்து வரும் லோகேஷ், இந்த காலகட்டத்தை ரஜினியுடன் ஒரு பயணம் என்று வர்ணிக்கிறார். “இது வெறும் சினிமா வேலை மட்டும் இல்ல. ரஜினி சார்கூட இருந்தது ஒரு வாழ்க்கை பாடம். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பெரிய பட்ஜெட் படங்களில் பணிபுரிவது ஒருவித அழுத்தத்தை கொடுக்கும் என்றாலும், லோகேஷ் அதை தனது பாணியில் கையாள்கிறார். “நான் ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணி வேலை செய்ய மாட்டேன். படம் நல்லா வந்தா போதும்னு நினைப்பேன்,” என்று தனது நிதானமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். நடிகர்களுடன் பணிபுரியும் விதத்தைப் பற்றி கூறுகையில், “நான் அவங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன்” என்றார்.மொழி தாண்டிய நட்பு:வெவ்வேறு மொழி பின்னணியிலிருந்து வரும் நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட லோகேஷ், அவர்கள் தங்களுக்குள் குழுக்கள் அமைத்துக் கொள்வது சுவாரஸ்யமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.பாடல்களின் பொருத்தம்:தனது படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது குறித்து பேசிய லோகேஷ், அவை திணிக்கப்பட்டதாக இல்லாமல் கதைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகத் தெரிவித்தார். பல்வேறு நடிகர்களுடன் பணியாற்றவும், அவர்களின் பலத்தை வெளிப்படுத்தும் கதைகளை உருவாக்கவும் விரும்புவதாக லோகேஷ் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் ஒரு முழுமையான அதிரடித் திரைப்படத்தை இயக்கவும் ஆசை இருப்பதாகக் கூறினார்.விமர்சனங்களும் பாடங்களும்:”லியோ” படத்திற்கு கிடைத்த விமர்சனங்களைப் பற்றி பேசிய லோகேஷ், “விமர்சனங்களை நான் எப்பவுமே கவனிப்பேன். அதுல இருந்து கத்துக்க நிறைய இருக்கு,” என்று நேர்மறையான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார். தனது விருப்பமான திரைப்படமான “கைதி” பற்றி பேசுகையில், அப்படத்தின் தனித்துவமான உருவாக்கம் குறித்து லோகேஷ் பெருமிதம் கொண்டார்.ரஜினியின் அறிவுரை:ரஜினிகாந்த் தனக்குக் கூறிய அறிவுரை ஒன்றை லோகேஷ் பகிர்ந்துகொண்டார். “வாழ்க்கையில எல்லாமே கத்துக்கத்தான். ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்,” என்று ரஜினி கூறியதாக அவர் தெரிவித்தார். திரைப்படங்களில் உயர்வான தருணங்களை உருவாக்குவதும், அவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் முக்கியம் என்று லோகேஷ் குறிப்பிட்டார். ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் தனது படைப்புகளில் இருப்பதை ஒப்புக்கொண்ட லோகேஷ், குறிப்பாக இடைவேளைகளைப் பயன்படுத்துவது குறித்து பேசினார்.”கூலி” – ஒரு புதிய முயற்சி:”கூலி” திரைப்படம் எந்த ஒரு குறிப்பிட்ட படைப்பாலும் ஈர்க்கப்படவில்லை என்றும், இது ஒரு புதிய முயற்சி என்றும் லோகேஷ் திட்டவட்டமாக கூறினார். ஒரு படத்தில் நடிகருக்கு அதிக பங்கு (அ) இயக்குனருக்கா என்ற விவாதத்தைப் பற்றி பேசிய லோகேஷ், இது சூழ்நிலையைப் பொறுத்தது என்று தனது கருத்தை தெரிவித்தார்.சினிமா பயணம் – முடிவில்லைதமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமான லோகேஷ் கனகராஜ், தனது திரையுலகில் தனது எதிர்காலம் குறித்து சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மூத்த இயக்குனர்கள் தனக்குக் கூறிய அறிவுரை ஒன்றை லோகேஷ் நினைவு கூர்ந்தார்.தான் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களுக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய லோகேஷ், மூத்த இயக்குனர்களின் அறிவுரையை மேற்கோள் காட்டி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். “சினிமாவுல உன் கெரியர் எப்போது முடியனும் நீயே முடிவு பண்ணாத,” என்பதே அந்த அறிவுரை.”சினிமா எப்போது உங்களை உள்ளே எடுக்கும் (அ) வெளியேற்றும் என்று நீங்களே முடிவு செய்யக் கூடாது,” என்று 2 முக்கிய இயக்குனர்கள் தனக்கு அறிவுரை கூறியதாக லோகேஷ் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகளை ஆழ்ந்து உள்வாங்கியிருக்கும் அவர், “நான் 10 படங்களுக்கு மேல் செய்ய மாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அவர்கள் சொன்னது ரொம்ப சரி. சினிமாதான் எல்லாம் முடிவு பண்ணும்,” என்று தனது பணிவான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். மேலும், தான் 10 படங்களுக்கு மேல் செய்தாலும் மகிழ்ச்சி அடைவேன் என்று லோகேஷ் கூறினார். இது, சினிமாவின் மீதான அவரது தீராத காதலையும், தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தையும் காட்டுகிறது.லோகேஷ் கனகராஜ், குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையைப் பதித்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் உடன் “கூலி” படத்தில் பணியாற்றி வரும் அவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடனும் இணையவுள்ளார்.நன்றி: Sudhir Srinivasanசினிமாவில் இருந்து அழைப்பு வரும் வரை தனது திரைப்பயணம் தொடரும் என்று உறுதியாக கூறும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழ் திரையுலகிற்கு மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்குவார் என்பதில் சந்தேகமில்லை.