நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் முன்னதாக வெளியான ‘தீமா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.  

இப்படத்திற்கு முன்னதாக ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பு என்னுடையது என இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்து விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். அது மட்டுமின்றி இந்த தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எல்.ஐ.சி நிறுவனமும் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. 

Advertisement

இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை 25ஆம் தேதி அவருக்கு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது படக்குழு. அதில் படத்தின் பெயரை  ‘எல்.ஐ.கே’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என மாற்றினர். இதையடுத்து படத்தில் நடித்துவரும் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் பின்பு கதாநாயகி க்ரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டனர். 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தாண்டு செப்டம்பர் 18ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரு சின்ன வீடியோவையும் ரிலீஸ் தேதியுடன் கூடிய இரண்டு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த சிறிய வீடியோவில் கௌரி கிஷனும் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களும் கலர் ஃபுல்லாக அமைந்துள்ளது. முன்னதாக இப்படம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் மற்றொரு படமான ‘டியூட்’(Dude) படம் தீபாவளிக்கு வெளியாகுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ அப்டேட் வெளியாகியுள்ளது. 


<!–
–>

Advertisement

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement

–>