Connect with us

விளையாட்டு

என்னா அம்பயரிங் இது.. கே.எல்.ராகுல் அவுட்டை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

Published

on

என்னா அம்பயரிங் இது.. கே.எல்.ராகுல் அவுட்டை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

Loading

என்னா அம்பயரிங் இது.. கே.எல்.ராகுல் அவுட்டை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

பெர்த் டெஸ்ட் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அவுட்டான விதம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. மூன்றாம் நடுவர் ரிவூயுவில் பார்த்தும் இது என்னா அம்பயரிங் என்று நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். கே.எல்.ராகுல் 74 பந்துகளை சந்தித்து 24 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

Advertisement

பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலும் அடுத்து வந்த தேவ்தத் படிக்கலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் விராட் கோலி 5 ரன்களில் நடையை கட்டினார். சற்றே நிதானமாக விளையாடிய வந்த கே.எல்.ராகுலும் 26 ரன்களில் அவுட் ஆனார்.

இளம் வீரர்கள் துருவ் ஜுரேல் 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். சற்று நேரம் நிலைத்து நின்று ஆடிய ரிஷப் பந்த், 37 ரன்களில் பேட் கம்மின்ஸ் இடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அறிமுக வீரராக களம் கண்ட நிதிஷ் ரெட்டி கடைசி விக்கெட்டாக 41 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 49 புள்ளி 4 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

“His pad and bat are not together at that point in time as the ball passes.

Advertisement

“It’s (bat hitting pad) after, in fact, the ball passes the edge. Does Snicko pick up the sound of the bat hitting the pad?

“We’re assuming (Snicko) may be the outside edge of the bat but that may not… pic.twitter.com/hvG0AF9rdo

இந்நிலையில் கே.எல்.ராகுலின் விக்கெட், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல், மிட்சல் ஸ்டார்க்கின் பந்தை எதிர்கொண்ட போது, 3 ஆம் நடுவரின் தீர்ப்பு படி ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆனால், பந்து அவரது Bat-ல் படவில்லை என்றும், PAD-ல் பட்ட ஒலியை வைத்து தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 8 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வெனி 10 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மூவரின் விக்கெட்டையும், கேப்டன் பும்ரா வீழ்த்தினார்.

Also Read : 
ஐபிஎல் 2025 தேதிகள் அறிவிப்பு… ஏலம் தொடங்குவதற்கு முன் வெளியிட்டது பிசிசிஐ

இதையடுத்து வந்த டிராவிஸ் ஹெட்டை, அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா வெளியேற்றினார். ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை எடுத்திருந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை ஜஸ்புரித் பும்ரா வீழ்த்தினார். இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய விக்கெட்களை விரைவாக வீழ்த்தி இந்திய அணி முன்னிலை பெற்று இராண்டவது இன்னிங்ஸை தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன